ராணிப்பேட்டை நவல்பூர் புதுத்தெருவில் வசிப்பவர் ஜெயராமன் (70). தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார்.
Source : Dinamalar
இவரது மகன் விக்னேஷ் (29). பெயின்டர் வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையான இவர் கடந்த 7ம் தேதி இரவு தனது அறையில் தூக்கு மாட்டிக்கொண்டார். இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா . அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு சென்று பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு விக்னேஷ் நேற்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.