வாலாஜா அருகே கணவர் கண்முன்னே இடிதாக்கியத்தில் மனைவி உயிரிழந்தார். 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரதுமனைவி பார்வதி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள், ஒருமகன் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.

இந்நிலையில் நேற்று பார்வதியின் உறவினர் வீட்டின் காதுகுத்து நிகழ்ச்சியில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி இருவரும் ஆர்.கே.பேட்டைக்கு சென்று, பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

சித்தாத்தூர் அருகே மழை அதிகமாக பெய்ததால் பார்வதி அவரது கணவரிடம் புளியமரத்திற்கு அருகே நில்லுங்கள் என்று கூறி மரத்தின் அடியில் இருவரும் நின்றுள்ளனர். அப்போது திடீரென மின்னல் பார்வதி மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார்.

பின்னர் கார்த்திகேயன் காப்பாற்ற செல்லும் போது அவர்மீதும் லேசாக மின்னல் தாக்கப்பட்டதால் சுருண்டு சாலையில் விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிறகு பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திகேயன் சிறிது காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.