🔭 1610ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி டெலஸ்கோப் சாதனத்தை விஞ்ஞானி கலிலியோ உருவாக்கி வெற்றி பெற்றார்.


🏃 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தடகள ஆட்டக்காரர் உசேன் போல்ட் ஜமேக்காவில் பிறந்தார்.

🎵 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பாரத ரத்னா விருது பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் மறைந்தார்.

★ 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

🌃 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் மறைந்தார்.


நினைவு நாள் :-


🏁 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சச்சிதானந்த ராவுத்ராய் மறைந்தார்.


பிறந்த நாள் :-


ப.ஜீவானந்தம்

🏁 மகாத்மா காந்தியால் 'இந்திய தேசத்தின் சொத்து' என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப.ஜீவானந்தம் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார்.

🏁 இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். இவர் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.

🏁 1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.

🏁 தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப.ஜீவானந்தம், 1963ஆம் ஆண்டு தமது 55வது வயதில் மறைந்தார்.


பிரம்ம பிரகாஷ்

💣 விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முதல் இயக்குநர் டாக்டர் பிரம்ம பிரகாஷ் 1912ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தார்.

💣 பிரபல விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்னாகருடன் இணைந்து, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1949-ல் பம்பாயில் உள்ள அணுசக்தி நிறுவனத்தில் ஹோமி பாபாவால் உலோகவியலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

💣 1951-ல் பெங்கள10ர், இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் துறையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் படிப்புக்கு நவீன பாடத்திட்டம் வகுத்தார்.

💣 1952 முதல் 1972 வரை நாட்டின் அணுசக்தி திட்டங்களில் முக்கியப் பங்காற்றினார். விண்வெளி ஆணைய உறுப்பினராக இறுதிவரை செயல்பட்டார். பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்றவர்.

💣 நாட்டின் பல வெற்றிகரமான செயற்கைக்கோள், ஏவுகணை திட்டங்களில் முக்கியப் பங்காற்றிய இவர் தனது 72-வது வயதில் (1984) மறைந்தார்.

இன்றைய நிகழ்வுகள்


1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர்.

1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான்.

1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர்.

1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர்.

1791 – எயித்தியில் இடம்பெற்ற வூடூ பண்டிகை அடிமைகளின் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து எயித்தியப் புரட்சி ஆரம்பமானது.

1808 – ஆர்தர் வெல்லசுலி தலைமையிலான பிரித்தானிய, போர்த்துக்கீசப் படையினர் பிரெஞ்சுப் படையினரை போர்த்துகலில் விமெய்ரோ கிராமத்தில் நடந்த சமரில் வென்றனர்.

1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1831 – வர்ஜீனியாவில் அமெரிக்கக் கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதன் போது 55 முதல் 65 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கேன்சசு மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.

1888 – முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.

1920 – ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ. கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.[1]

1942 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜெர்மனியின் கொடி நாட்டப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.

1957 – சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.

1959 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.

1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

1971 – பிலிப்பீன்சு, மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோசுக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.

1982 – லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.

1983 – பிலிப்பீன்சு எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

1986 – கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 20 கிமீ சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1988 – நேபாள-இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.

1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

1993 – நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.

1994 – மொரோக்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 44 பேரும் உயிரிழந்தனர்.[2]

1995 – அமெரிக்காவில் சியார்ச்சியா மாநிலத்தில் பிரேசில் வானூர்தி ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 29 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.[3]

2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

2013 – சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2014 – பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.

2014 – குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இன்றைய பிறப்புகள்


1567 – பிரான்சிசு டி சேலசு, சுவிட்சர்லாந்து ஆயர், புனிதர் (இ. 1622)

1765 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (இ. 1837)

1789 – அகுஸ்டின்-லூயி கோசி, பிரெஞ்சுக் கணிதவியலாளர் (இ. 1857)

1907 – ப. ஜீவானந்தம், இந்தியப் பொதுவுடமைவாதி (இ. 1963)

1915 – இசுமத் சுகதாய், இந்திய உருது எழுத்தாளர் (இ. 1991)

1917 – லியோனிடு ஹுர்விக்ஸ், உருசியப் பொருளியலாளர், கணிதவியலாளர் (இ. 2008)

1929 – மன்னார்குடி பரமசிவம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் 1976)

1929 – அகமத் கத்ரடா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, அரசியல் கைதி (இ. 2017)

1930 – சுஜித் முக்கர்ஜி, இந்திய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (இ. 2003)

1934 – ஜான் லீவிஸ் ஹால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1942 – ம. வே. பசுபதி, தமிழக எழுத்தாளர், தமிழறிஞர் (இ. 2022)

1957 – லிவிங்ஸ்ட்ன், தமிழகத் திரைப்பட நடிகர்

1961 – வ. பி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2019)

1963 – ராதிகா, தமிழகத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்

1963 – ஆறாம் முகம்மது, மொரோக்கோ மன்னர்

1973 – சேர்ஜி பிரின், கூகுள் நிறுவனர்

1978 – பூமிகா சாவ்லா, இந்திய நடிகை

1978 – கனிகா கபூர், இந்தியப் பின்னணிப் பாடகர்

1984 – நியல் டெக்ஸ்டர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்

1984 – பருன் சொப்டி, இந்திய நடிகர்

1985 – மேலீசா, பிரெஞ்சுப் பாடகி

1986 – உசேன் போல்ட், யமைக்கா ஓட்டவீரர்

1988 – சனா கான், இந்திய நடிகை

இன்றைய இறப்புகள்


1836 – கிளாட்-லூயி நேவியர், பிரான்சியப் பொறியாளர், இயற்பியலாளர் (பி. 1785)

1940 – லியோன் திரொட்ஸ்கி, உருசியப் புரட்சியாளர் செஞ்சேனையைத் தோற்றுவித்தவர் (பி. 1879)

1974 – எல். எம். மில்னி-தாம்சன், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1891)

1981 – காகா காலேல்கர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1895)

1995 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (பி. 1910)

2004 – சச்சிதானந்த ராவுத்ராய், இந்திய ஒரியக் கவிஞர் (பி. 1916)

2006 – பிசுமில்லா கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1916)

இன்றைய சிறப்பு நாள்


இளைஞர் நாள் (மொரோக்கோ)