🚢 1678ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அமெரிக்காவின் முதலாவது கப்பலான லெ கிரிஃபோன், ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.


🏤 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

🏀 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தேசிய கூடைப்பந்து சங்கம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.


நினைவு நாள் :-


👉 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி சுவாமி சின்மயானந்தா மறைந்தார்.


பிறந்த நாள் :-


மைதிலி சரண் குப்த்

✍ விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கவிஞருமான மைதிலி சரண் குப்த் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் பிறந்தார். 

✍ 12 வயதில் இவர் எழுதிய கவிதையை பார்த்து நெகிழ்ந்துபோன இவருடைய அப்பா, என்னைவிட ஆயிரம் மடங்கு சிறந்த கவிஞனாக மாறுவாய் என்று ஆசிர்வதித்தார்.

✍ இவரது முதல் முக்கிய படைப்பு 'ரங் மே பங்' ஆகும். அதை தொடர்ந்து சாகேத், பாரத் பாரதி, ஜெயத்ரத் வத், கிஸான், விகட் பட், வைதாலிக், குணால், விஸ்வராஜ்ய, ஜுஹஷ், காபா - கர்பலா ஆகியவற்றை படைத்துள்ளார்.

✍ மகாத்மா காந்தி, வினோபா பாவே போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இவர் பல விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். 

✍ மகாத்மா காந்தி இவரை 'ராஷ்டிர கவி' என்று புகழாரம் சூட்டினார். இவர் மங்கள் பிரசாத் விருது, ஹிந்துஸ்தானி அகாடமி விருது, பத்மபூஷண் விருதும் பெற்றவர்.

✍ தன் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்த இவர் தனது 78வது வயதில் (1964) மறைந்தார்.


ஆகத்து 3 - தமிழ் விக்கிப்பீடியா
ஆகத்து 3 (August 3) கிரிகோரியன் ஆண்டின் 215 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 216 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.

இன்றைய நிகழ்வுகள்


70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது.

435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.

881 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார்.

1057 – ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1492 – கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார்.

1601 – நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது.

1645 – முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.

1678 – அமெரிக்கப் பேரேரிகளில் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் அமைக்கப்பட்டது.

1795 – அமெரிக்காவில் வடமேற்கு இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.

1858 – இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார்.[1]

1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: அரா என்ற இடத்தில் 10,000 இற்கும் அதிகமானோர் எட்டு நாட்களாக முற்றுகையிட்டிருந்த 68 பிரித்தானியப் படைகளுடனான ஒரு வலுவான கோட்டை விடுவிக்கப்பட்டது.

1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.

1914 – முதலாம் உலகப் போர்: செருமனி பிரான்சுடன் போர் தொடுத்தது. உருமேனியா நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.

1936 – உருசியாவின் ரியாசன் மாகாணத்தில் தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர், 20 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் படையினர் பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.

1946 – உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய கேளிக்கைப் பூங்கா அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1949 – அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.

1959 – போர்த்துகலின் அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் பிசாவு நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.

1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1977 – உலகில் பெருமளவு வெளியிடப்பட்ட முதலாவது தனி மேசைக் கணினிகளில் ஒன்றான டிஆர்எஸ்-80 ஐ டாண்டி கார்ப்பரேசன் வெளியிட்டது.

1990 – கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முசுலிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – அல்சீரியாவில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

2005 – மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2006 – திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.

2010 – பாக்கித்தான், கராச்சியில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 85 பேர் உயிரிழந்தனர்.

2014 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.

2018 – ஆப்கானித்தானின் கிழக்கே சியா பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர்.[2]

2019 – அமெரிக்கா, டெக்சாசு மாநிலத்தில் எல் பாசோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்க்சி சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர்.[3]

இன்றைய பிறப்புகள்


1347 – அலாவுதின் பாமன் சா, பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. 1358)

1856 – ஆல்பிரெட் டிக்கன், ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (இ. 1919)

1869 – இவான் இவானோவிச் செகால்கின், உருசியக் கணிதவியலாளர் (இ. 1947)

1884 – நான்காம் கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1940)

1886 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1964)

1890 – ஸ்ரீ பிரகாசா, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1971)

1913 – ஸ்ரீபாத பினாகபாணி, தென்னிந்தியக் கருநாடக இசைப்பாடகர், மருத்துவர் (இ. 2013)

1923 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (இ. 2014)

1945 – வாணிஸ்ரீ, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1950 – ஆறு. இராமநாதன், தமிழக எழுத்தாளர்

1960 – கோபால் சர்மா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்

1979 – இவாஞ்சலீன் லில்லி, கனடிய நடிகை

1984 – சுனில் சேத்ரி, இந்தியக் கால்பந்தாட்ட வீரர்

1989 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு காரோட்ட வீரர் (இ. 2015)

இன்றைய இறப்புகள்


1749 – அன்வருத்தீன் கான், இரண்டாவது ஆற்காடு நவாப் (பி. 1672)

1924 – ஜோசப் கொன்ராட், போலந்து-பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1857)

1957 – தேவதாஸ் காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1900)

1975 – என். வி. நடராசன், தமிழக அரசியல்வாதி (பி. 1912)

1993 – சுவாமி சின்மயானந்தா, வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. 1916)

2008 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1918)

2019 – நிக்கொலாய் கர்தசோவ், உருசிய வானியற்பியலாளர் (பி. 1932)

இன்றைய சிறப்பு நாள்


விடுதலை நாள் (நைஜர், பிரான்சிடம் இருந்து 1960)