பாணாவரம் அடுத்த பள்ளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பிரபு(30). கட்டட மேஸ்திரி வேலை செய்து வந்த இவர் குடிபழக்கத்துக்கு அடிமையானார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த பிரபுவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் விரத்தி அடைந்த அவர், அதே பகுதியில். உள்ள ஏரிக்கரை அருகே உடலில் மண்ணெண் ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீ காயம் அடைந்த பிரபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம். இரவு உயிர் இழந்தார். 

இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.