தேவையானவை 

  • தோசைமாவு ஒரு கப் 
  • முட்டை 2. 
  • மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் 
  • பால் - ஒரு டீஸ்பூன், 
  • மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 
  • உப்பு - கால் டீஸ்பூன், 
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: 

ஈரமில்லாத ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி, (உப்பு சேர்க்காமல்) நன்கு நுரை வரும்வரை அடித்துக்கொள்ளுங்கள். அதில் மிளகு -சீரகத் தூள், உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து, மீண்டும் நன்கு அடித்து வையுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து. மாவை மெல்லிய தோசையாக ஊற்றுங்கள். அடித்துவைத்திருக்கும் முட்டைக் கலவையில், பாதியை தோசையின் மேல் ஊற்றி, தோசைக்கல்லைக் கைகளில் எடுத்து வட்ட வடிவில் சுற்றவேண்டும் (ஆப்பச் சட்டியை சுற்றுவது போல) முட்டை அப்படியே தோசையின் மேல் பரவி, கல்லின் சூட்டுக்கு நன்கு வெந்துவிடும் சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுங்கள், பூண்டுத் துவையலை, இந்த முட்டை தோசையின் மேல் பரவலாகத் தடவி, சுருட்டி, 'தோசை ரோல்' ஆக செய்து சாப்பிட்டால், அந்த ருசியே அலாதி!