தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 'சூரரைப்போற்று' படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் தேசிய விருதும் பெற்றார்.
‘அகரம்' என்ற அறக்கட்டளையை தொடங்கி, ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார். தயாரிப்பு நிறுவனமும் தொடங்கி பல புதுமுக இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
சினிமாவின் அடுத்த கட்ட பயணமாக தியேட்டர்களை வாங்க சூர்யா திட்டமிட்டுள் ளார். அதன்படி 5 தியேட்டர்களை அவர் குத்தகைக்கு வாங்கி நடத்த திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது. மாவட்டந்தோறும் தியேட்டர்களை நடத்துவது குறித்தும் முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை அறியவும், அதை நிறைவேற்றும் முயற்சியாகவும், வினி யோகஸ்தர்களின் வலிகளை உணரவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என சூர்யா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் ஒரு முன்னோட்டமாக அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.