மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் புகழ் பெற்ற சோனி நிறுவனம் புதிதாக லிங்க் பட் என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மோதிர வடிவிலான டிசைனைக் கொண்டுள்ளது இதன் சிறப்பு. இதில் சோனி நிறுவனத்தின் டிஜிட்டல் சவுண்ட் என் ஹான்ஸ்ட் என்ஜின் எனும் தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது. சிறிய, மிக கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டது.
இதில் அடாப்டிவ் வால்யூம் கண்ட்ரோல் வசதி இருப்பதால் இனிய இசையை இடையூறின்றி கேட்டு மகிழ முடியும். கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அலெக்ஸா உள்ளிட்ட குரல் வழிக்கட்டுப்பாட்டு அமைப்பு களின் மூலம் இதை செயல்படுத்த முடியும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்தரை மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் 12 மணி நேரம் செயல்படுவதற்கான பேட்டரி சேமிக்கப்பட்டிருக்கும். இதன் எடை தலா 4.1 கிராம். இதன் விலை சுமார் ரூ.12,990/-.