தேவையானவை: 

  • முட்டை - 4. 
  • பிரெட் - 5, 
  • கரம் மசாலாதூள் - கால் டீஸ்பூன், 
  • மிளகாய்தூன் அரை டீஸ்பூன், 
  • இஞ்சி - பூண்டு விழுது அரை டீஸ்பூன், 
  • உப்பு - கால் டீஸ்பூன், 
  • மஞ்சன்தூள் ஒரு சிட்டிகை, (விருப்பப்பட்டால்) 
  • பூண்டு - 2 பல், 
  • சின்ன வெங்காயம் - 4 சேர்த்து அரைத்த விழுது - சிறிதளவு.

செய்முறை 

பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து கலந்துகொள்ளுங்கள். பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, கற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள். 

மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம். சுவையும் அதிகம்.