அரக்கோணம் கோட்டத்தை சேர்ந்த பள்ளூர், தக்கோலம், புன்னை துணைமின்நிலையங்களில் மாதாந்திர மின் சாதன பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, பள்ளூர், கம்மவார் பாளையம், கோவிந்தவாடி அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலி, தக்கோலம், சிஐ எஸ்எப், அரிகலபாடி, புது கேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுப் பாக்கம், மகேந்திரவாடி, மேல்களத்தூர், எலத்தூர், கீழ்வெங்கடாபுரம், வேட்டாங்குளம், மேலேரி, சிறுணமல்லி, சம்பத்ராயன் பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.