ஒன் பிளஸ் நிறுவனம் நார்ட் பட்ஸ் சி.இ. என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இது புளூடூத் 5.2 இணைப்பு வசதி கொண்டது. இதில் டைட்டானியம் டைனமிக் டிரைவர் உள்ளதால் துல்லியமான இசையைக் கேட்டு மகிழலாம். காதில் கச்சிதமாக பொருந்தும் வகையிலான வடிவமைப்பு கொண்டது. இது எடை (தலா 3.5 கிராம்) குறைவானது.
வெளிப்புற இரைச்சலை முற்றிலுமாக தவிர்க்கும் நுட்பம் கொண்டது. இயர்போனில் 27 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்ந்து நான்கரை மணி நேரம் செயல்பட உதவுகிறது. இது 20 மணி நேரம் செயல்படுவதற்கான மின்சாரத்தை சேமித்து வைத்திருக்கும். வெள்ளை, கிரே நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.2,299/-.