திருவலம் அருகே கார்ணாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது முதியவர் நேற்று முன்தினம் மதியம் நடந்து வந்து கொண்டிருந்தார்.
திடீரென்று தலை சுற்றல் ஏற்பட்டு கீழே உட்கார்ந்தவர் மயக்க மடைந்தார்.
அவ்வழியே வந்தவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து முதியவரை அதில் ஏற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு வேலூர், அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று இறந்தார்.
திருவலம் எஸ்ஐ மனோகரன் வழக்குப்பதிவு செய்து முதியவர் குறித்து விசாரித்து வருகிறார்.