பிசாசு 2 படத்திலிருந்து ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி நீக்கப்பட்டுள்ளது. 

Director Mysskin Removed 15 Mins Nude Scene Of Andrea Jeremiah From Pisasu 2மிஷ்கின் இயக்கத்தில் 2014ல் வெளியான படம் பிசாசு. இந்த படத்தின் 2ம் பாகமாக பிசாசு 2 இம்மாதம் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், ராஜ்குமார் பிச்சுமணி நடிக்கின்றனர். கவுரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். 

இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண காட்சியில் நடித்தார். முதலில் இந்த காட்சியில் நடிக்க ஆண்ட்ரியா மறுத்தார். பின்னர் மிஷ்கின் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். 

படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி நடித்ததாக ஆண்ட்ரியா கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது எடிட்டிங்கில் இந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, 'பிசாசு படத்தை சிறுவர்களும் பார்த்து ரசித்தார்கள். அதை மனதில் வைத்து பிசாசு 2 படத்தையும் இயக்கியுள்ளேன். படத்தில் இதுபோல் நிர்வாண காட்சி இடம்பெற்றால், பேமிலி ஆடியன்சை இழக்க நேரிடலாம். குறிப்பாக, சிறுவர்களை இந்த படத்துக்கு அழைத்து வருவதை பெற்றோர் தவிர்க்கலாம். 

சிறுவர், சிறுமிகளும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக ஆண்ட்ரியா நடித்த அந்த காட்சியை நீக்கிவிட்டேன்' என்றார். படத்தில் இந்த காட்சி 10 நிமிடத்துக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது.