Minister Gandhi orders to repair Desingu Raja, Rani memorial


ராணிப்பேட்டை நகரப் பெயர் உருவாகக் காரணமாக இருந்த தேசிங்கு ராஜா-ராணி நினைவிடத்தில் அமைச்சர் ஆர்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து இந்த நினைவுச் சின்னங்களை சீரமைக்கும் பணிகளை மேற் கொள்ள அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

ராணிப்பேட்டை நகரம் உருவாகக் காரணமாக இருந்த தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவிட சமாதி அமைந்துள்ள இடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டார்.
சிதிலமடைந்த காணப்பட்ட அந்த பகுதியை சீரமைத்து போதிய வழிகாட்டி பலகைகள் மற்றும் தேசிங்கு ராஜா மற்றும் ராணியின் வரலாறுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் அமைத்து உரிய மரியாதை வழங்கிடும் வகையில் அந்தப் பகுதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
இந்த நினைவிடங்கள் அமைந்துள்ள இடம் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. ஆகவே இதனை முழுவதையும் சீரமைக்க தேவையான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு தகவல் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத், நகராட்சி ஆணையர் ஏகராஜ், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.