வாலாஜாபேட்டை ரஃபிக் நகர் பகுதியில் வசித்து வருபவர் உஷாராணி (50). இவர் வீட்டில் கடந்த 8ம் தேதி இரவு ஆசாமி ஒருவர், சுவர் ஏறி குதித்து திருட முயற்சித்துள்ளார்.

அப்போது பக்கத்து வீட்டில் உள்ள ராகுல், சரண்குமார், ராஜ்கமல் ஆகிய மூவரும் பார்த்துள்ளனர். உடனடியாக அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

வாலாஜாபேட்டை போலீசார் அந்த நபரை விசாரித்ததில் அவர் பெயர் மணிகண்டன் (45) அம்பேத்கர் நகர் காலனி முதல் தெரு, மதுரை என்றும் பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கி உள்ளவர் என்றும் தெரியவந்தது. 

அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.