தேலையாளவை
- முட்டை - 3.
- சின்ன வெங்காயம் - 15.
- காய்ந்த மிளகாய் - 10.
- தேங்காய் எண்ணெய் - 3
- டேபிள்ஸ்பூன்,
- உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை
முட்டையை உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நைஸாக அரைத்தெடுங்கள், ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்த மசாலாவை சுருளச் சுருள வதக்குங்கள் வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு. மசாலாவில் போட்டுக் கிளறுங்கள் முட்டையில் மசாலா நன்கு சார்ந்ததும் இறக்குங்கள்.
இந்த கேரள ஸ்டைல் தொக்கு தயிர் சாதத்துக்கு ஏ-ஒன் சைட் டிஷ்.