வாலாஜாபேட்டையில் தந்தையுடன் ஏற்பட்டதகராறில் வெடி மருந்து வைத்து கல்லூரி மாணவர் ஒருவர் வீட்டை தகர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Dispute with father: student blew up house with explosives!


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தரணி. இவர் தனது அண்ணனுக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் வேலை பார்த்து வருகிறார். தரணிக்கு நிர்மல் என்ற மகன் இருக்கிறார். விசாரம் பகுதியில் உள்ள கல்லூரியில் நிர்மல் படித்து வருகிறார். 

இந்நிலையில் சித்தப்பாவின் பட்டாசுக் கடையில் தனது தந்தை வேலைபார்ப்பது நிர்மலுக்கு பிடிக்கவில்லை. இதனால் தந்தை, மகன் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நிர்மல், தனது வீட்டிற்கு வெடி மருந்தை வைத்துள்ளார். சித்தப்பாவின் கடையில் தனது தந்தை வேலை பார்ப்பது பிடிக்காததால் நிர்மல் இன்று வெடி மருந்தை வெடிக்கச் செய்துள்ளார். இதில் தரணியின் வீட்டில் ஒரு பாகம் வெடித்துச்சிதறியது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மீட்பு பணியில் இறங்கினர்.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து வாலாஜாபேட்டை போலீசார் தரணி மற்றும் நிர்மலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.