தேவையானவை: 

  • முட்டை - 5, 
  • காலிஃப்ளவர் - 1, 
  • பெரிய வெங்காயம் - 1, 
  • பச்சை மிளகாய் - 2, 
  • பொட்டுக்கடலை மாவு - 3 டீஸ்பூன்
  • மிளகுதூள் - அரை டீஸ்பூன், 
  • மஞ்சள்தூன் கால் டீஸ்பூன், 
  • உப்பு - சுவைக்கேற்ப, 
  • எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை 

காலிஃப்ளவரை துண்டுகளாக்கி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு சுத்தம் செயுங்கள் தண்டுகளே இல்லாமல் மேலிருக்கும் வெண்மையான பூக்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளுங்கள், வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகுதூள், பொட்டுக்கடலை மாவு, மஞ்சள்தூள், உப்பு இவற்றுடன் 2 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். முட்டைகளை உடைத்து அதில் ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ளுங்கள் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காலி ஃப்ளவர் போட்டுக் கலந்து கொள் ளுங்கள். சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றியெடுத்துப் பரிமாறுங்கள்.