Gudiyatham student wins silver medal in South Indian level archery competition

தென்னிந்திய அளவில் நடந்த வில் வித்தை போட்டியில் குடியாத்தம் மாணவி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுத்தோறும் ஆடி மாதம் வல்வில் ஓரி விழா அரசு விழாவாக கொண்டாப்ப டுகிறது. கடந்த 2 ஆண்டுக ளாக கொரோனாவால் விழா நடக்கவில்லை.

இந்தாண்டு அரசு சார்பில் வல்வில் ஓரி விழா. சுற்றுலா விழா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் மாவட்ட வில் வித்தை சங்கம் சார்பில் தென்னிந்தியா அளவில் வில் வித்தை போட்டி தொடர்ந்து 3 நாட்களாக நடந்தது. இதில் புதுச்சேரி, கர்நாடகா, தெலங்கானா. கேரளா உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செண்டத்தூரை சேர்ந்த செவிலியர் ஜாஸ்மின் பிரியதர்ஷினி-ஜோயல் தம்பதி. இவர்களது மகள் ஜோனாசேரன் ஜாய்ஸ் 5ம் வகுப்பு மாணவி 12 வயது பிரிவினருக்கான போட்டியில் பங்கேற்றார். மேலும் தென்னிந்தியா அளவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவரை குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, எஸ்ஐ தனஞ்ஜெயன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஆசிரியை லாவண்யா உள்ளிட்டோர் பாராட்டினர்.