Thirupati Thirumala Arjitha Seva tickets for the month of October will be released tomorrow
திருமலை ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
அதன்படி வரும் அக்டோபர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வரும் புதன்கிழமை (ஆக.24) காலை 10 மணிக்கு வெளியிடப்படஉள்ளது.
மேலும் ஆர்ஜித சேவாவிற்கு தொடர்புடைய சில டிக்கெட்டுகள் மதியம் 2 மணிக்கும், வர்ச்சுவல் முறையில் (வீட்டிலிருந்த படியே கலந்து கொள்ளும் சேவா) கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவா டிக்கெட் டுகள் புதன்கிழமை மாலை 4 மணிக்கும் ஆன்லைனில் வெளியி டப்பட உள்ளது.
இதற்காக பக்தர்கள் www.tirupatibalaji. ap.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.