ஆற்காடு அடுத்த ஆயிலம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியம் (36). இவரது மனைவி இனிபோதும் (30). கடந்த 10 மாதத்துக்கு முன்பு மனைவியிடம் கோபித் துக்கொண்டு சத்தியம் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அவரது மனைவி கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தார்.

நேற்று காலை சத்தியம் மனைவி இனிபோதும், வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். மதியம் 1 மணியளவில் கணவர் சத்தியம் வீட்டுக்கு வந்துள்ளார். வீடு பூட்டப் பட்டு இருந்ததால் மொட்டை மாடிக்கு சென்ற அவர், அங்குள்ள கம்பி வளையத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், சத்தியம் மனைவி இனிபோதுமுக்கு தகவல் தெரிவித் துள்ளனர். இதைக்கேட்டு வீட்டுக்கு விரைந்து வந்த இனிபோதும், அங்கு கணவர் சத்தியம் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.