Workers working in private company Sipcot died in an accident in Bharti Nagar


ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் வசிப்பவர் ஜீவரத்தினம் (22). இவர் ஆற்காடு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ராணிப்பேட்டை வள்ளலார் நகர் நவல்பூர் தண்டலம் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி (48). இவர் சிப்காட் பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று இரவு பாரதி நகர் ஆர்டிஓ ஆபீஸ் எதிரில் முன்னும் பின்னமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மழையின் காரணமாக முன்னால் சென்ற வாகன ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு சுப்பிரமணியை வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், ஜீவரத்தினம் என்பவரை வாலாஜா அரசு மருத்துவமனையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இறந்து விட்டனர். இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.