Uriyadi festival at Krishna Temple near Banavaram



பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கிராமம், கிருஷ்ணர் கோயில் திருவிழாவை யொட்டி ராதாருக்மணி சமேத கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.

பாணாவரம் அருகே கிருஷ்ணர் கோயில் உறியடி திருவிழாவில் சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் 36ம் ஆண்டு உறியடி திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதை யொட்டி, காலை கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும். தீபாராதனையும்,காப்புக் கட்டுதலும் நடந்தது. பின்னர் மகாபாரத சொற்பொழிவு நடந்தது.

தொடர்ந்து, மாலை 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உறியடித்து, வழுக்கு மரம் ஏறினர். இதில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு, ரொக்கப் பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர், இரவு அலங்கரிக் கப்பட்ட பூப்பல்லக்கில் கிருஷ்ணர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு ஆன்மிக நாடகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.