ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

'Kundas if you sell ganja'

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெ.விசுவேஸ்வரய்யா மற்றும் 2 காவல் துணைக் கண் காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப் பட்டு, மாவட்ட முழுவதும் சிறப்பு கஞ்சா சோதனை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அதில், மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப் பட்டு அவர்களிடமிருந்து ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான 2.15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என அதில் தெரிவித்துள்ளார்.