குறள் : 853

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்

மு.வ உரை :

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

கலைஞர் உரை :

மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்

சாலமன் பாப்பையா உரை :

மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

Kural 853

Ikalennum Evvanoi Neekkin Thavalillaath
Thaavil Vilakkam Tharum

Explanation :

To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.

Horoscope Today: Astrological prediction for August 26 2022

இன்றைய ராசிப்பலன் - 26.08.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


26-08-2022, ஆவணி 10, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.24 வரை பின்பு அமாவாசை. ஆயில்யம் நட்சத்திரம் மாலை 06.32 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வ அமாவாசை. நவகிரக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla Neram

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 26.08.2022 | Today rasi palan - 26.08.2022


மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வேலைபளு சற்று குறையும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனவருத்தங்கள் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நெருங்கியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக அமைந்து தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

மகரம்

இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

மீனம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன்கள் ஓரளவு குறையும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001