குறள் : 833

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்


மு.வ உரை :

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல் தக்கவற்றை நாடாமலிருத்தல் அன்பு இல்லாமை நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.


கலைஞர் உரை :

வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்


சாலமன் பாப்பையா உரை :

தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.


Kural 833

Naanaamai Naataamai Naarinmai Yaadhondrum

Penaamai Pedhai Thozhil


Explanation :

Shamelessness indifference (to what must be sought after) harshness and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.

Horoscope Today: Astrological prediction for August 06, 2022


இன்றைய ராசிப்பலன் - 06.08.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

06-08-2022, ஆடி 21, சனிக்கிழமை, நவமி திதி பின்இரவு 02.11 வரை பின்பு வளர்பிறை தசமி. விசாகம் நட்சத்திரம் மாலை 05.51 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் | Indraya Nalla Neram

காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


இன்றைய ராசிப்பலன் - 06.08.2022 | Today rasi palan - 06.08.2022

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.06 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் என்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வியாபார ரீதியான பயணங்களில் சற்று கவனம் தேவை.

ரிஷபம்

இன்று உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திடீர் என்று வரும் நல்ல செய்தியால் திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் சாதகப்பலன் உண்டாகும்.

சிம்மம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

இன்று முடியும் என்று நினைத்த காரியம் பாதியிலேயே தடைபடலாம். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டு என்றாலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் ரீதியாக அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் விஷயமாக வெளியூர் நபர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். 

கும்பம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். சொத்து ரீதியான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளையும் விரயங்களையும் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 12.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்பட்டால் தொழிலில் உள்ள சிக்கல்கள் ஓரளவு குறையும். 



கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001