Awareness Ranipet collector urges to prevent marriage in relationships
ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் தனியார் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி, உதவிகள் வழங்குதல், ஊராட்சித் தலைவர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சி யர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பேசியது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள், அனைவரும் அர சின் நலத் திட்டங்களை பெற மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டைகள் வழங்கியும், கணினியில் பதிவு செய்தும் வருகிறது.
ஆற்காடு, திமிரி பகுதிகளில் அதிகப்படியான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கிராம ஊராட்சித் தலைவர்கள் தங்கள் பகுதி யில் உள்ள மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து அரசின் நலத் திட்டங்கள் பெற உதவி புரிய வேண்டும்.
ரத்த உறவுகளில் திருமணம் செய்து கொள்வதைத் தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளி குறித்து ஆராய்ந்த போது, ரத்த உறவுகள் வழியாக பெரும்பான்மையான திருமணங்கள் நடை பெற்றது காரணம் என்பது தெரிய வருகிறது. எனவே, இதுகுறித்து பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை பொதுமக்கள் பின்பற்ற வழிவகுக்க வேண்டும்.
ஊராட்சித் தலைவர்கள் பொதுநிதியிலிருந்து அங்கன் வாடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றார்.
முகாமில் மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சரவணகுமார், ஆற்காடு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வருவாய்த் துறை அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.