கவலைபட வேண்டாம் !!
- திருமண தடை நீக்கும் மிக சிறந்த பரிகார தலமான திருமண மங்கலம் (தற்போது திருவோண மங்கலம் ) பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா ?
- கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன் ?
- வாருங்கள் திருமண மங்கலம் திருத்தலத்திற்கு.
எங்கே உள்ளது இத்தலம் ?
- குரு பகவான் அருள்புரியும் ஆலங்குடிக்கு வெகு அருகில் , நடை பயண தூரம் தான்.
- இங்குதான் ஆலங்குடி ஆபத்சஹாயேஸ்வர சுவாமிக்கும் , ஏலவார்குழலி அம்மைக்கும் திருமணம் நடை பெற்றது.
- இன்றும் பிரம்மோஸ்தவத்தின் போது,இறைவனின் திருமண உத்சவம் இங்கு தான் நடைபெறுகிறது.
- எனவே தான் இத்தலம் திருமண மங்கலம் (தற்போது திருவோண மங்கலம் ) என்று அழைக்கப்படுகிறது .
- மேலும்,மயானத்திற்கு நேர் எதிர் உள்ள வெகு சில தலங்களுள் இதுவும் ஒன்று.
- எனவே இது சிறந்த பரிகார தலமாக இது விளங்குகிறது.
- திருமண தடை நீங்கிட இது மிக சிறந்த பரிகார தலம்.
- இங்கு வந்து இறைவனை உளமார வழிபட விரைவில் திருமணம் நடைபெறுவது உறுதி.
- இல்லாள் வருவாள் ,நல்லறம் சிறக்க
- இத்தனை சிறப்புகள் இருந்தும் இந்த தலம் பலராலும் அதிகம் அறியபடாத தலமாகவே இருந்து வருகிறது.
அவரை கையோடு அழைத்து சென்று தரிசனம் செய்யலாம்.