• டெக்னோ ஸ்பார்க் 9டியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இந்த ஃபோனில் 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 5,000mAh பேட்டரி உள்ளது

டிரான்சியான் நிறுவனத்தின் அங்கமான டெக்னோ மொபைல் நிறுவனம் புதிதாக டெக்னோ ஸ்பார்க் 9 டி மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

இதில் 6.6 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரை, மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் உள்ளது.

இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளது. 

பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் இருக்கிறது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.9,299.