9 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் சரிதா.
1980, 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை சரிதா. சிறப்பான நடிப்பாற்றலால் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். வயது காரணமாக, இவருக்கு படங்கள் குறைய ஆரம்பித்தன. கடைசியாக பாலுமகேந் திரா இயக்கிய ஜூலி கணபதி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு அம்மா கேரக்டர்களுக்கு மாறிவிட்டார். ஜோதிகாவுடன் ஜூன் ஆர் என்ற படத் திலும் நடித்திருந்தார். 2013ம் ஆண்டு வெளியான சிலோன் என்ற தமிழ் படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து வந்தார். இதற்கு அவரது உடல் நிலையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது 9 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். அதுவும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன். இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். படத் தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க சரிதா ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ள சரிதா, தமிழ் படத் தின் மூலம் ரீஎன்ட்ரி ஆவதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.