5 people were injured in a fire at a tea shop near Vanapadi, Ranipet!
ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(62)என் பவர் வேதவல்லி பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் கடையில் கேஸ் அடுப்பு பற்றவைத்து டீ போட்டு வாடிக்கையாளருக்கு டீ கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி கொண்டது.
விபத்தில் வானாபாடி அடுத்த மாணிக்க நகர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55), வானாபாடி கிராமத்தை சேர்ந்த வேணு (45), சேட்டு (70), செட்டித்தாங்கல் பகுதி சேர்ந்த சேகர் இவர்கள் ஐந்துபேருக்கும்லேசான தீக்காயம் ஏற்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் அறிந்து வந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.