சொகுசு கார்களைத் தயாரிக்கும் ஜெர்மனியின் ஆடி நிறுவனம் புதிதாக கியூ 3 மாடலை அறிமுகம் செய்துள்ளது.  
பிரீமியம் பிளஸ் டெக்னாலஜி என்ற இரண்டு வேரியன்ட்கள் வந்துள்ளன. இதில் 2 லிட்டர் டி.எப்.எஸ்.ஐ. என்ஜின் உள்ளது. மேலும் நான்கு சக்கர சுழற்சி, 190 ஹெச்.பி. மற்றும் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 

எல்.இ.டி. முகப்பு விளக்கு, திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, பாதுகாப்பு அம்சமாக 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டது.

இதை ஸ்டார்ட் செய்து 7.3 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். 18 அங்குல ஸ்டைலான அலாய் சக்கரங்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், தானியங்கி ரியர் வியூ மிரர், 2 நிலை கிளைமேட் கண்ட்ரோல் வசதி, பார்க்கிங் எய்ட், குரூயிஸ் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. 

குழந்தைகள் பயணிப் பதற்கேற்ப ஐசோபிக்ஸ் இருக்கை வசதி உடையது. இதில் 10 ஸ்பீக்கர்கள் 180 வாட் திறனை வெளிப்படுத்தக் கூடியது. 

வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.