ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் 

Happy Teachers Day Status Wishes in Tamil | ஆசிரியர் தின வாழ்த்துகள்: 


செப்டம்பர் 05-ஆம் நாள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளினை ஆசிரியர் தினமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடி வருகின்றனர். 

செப்டம்பர் 5ம் தேதி 1888ம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். சென்னை, பல்லைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த ராதாகிருஷ்ணன், பிரசிடென்சி கல்லூரியில் தத்துவப் பாடத்திற்கான விரிவுரையாளராக பணியாற்றினார். அன்று முதல் இந்தியாவின் தத்துவம் மற்றும் ஆன்மீகத் துறையைப் பற்றி விரிவாக கற்கத் துவங்கினார். தத்துவத்தின் ஆசிரியனாகத் திகழ்ந்தார். அதன் பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார் ராதாகிருஷ்ணன். இதன் தொடர்ச்சியாக 1946-52ம் ஆண்டுகளில் யுனெஸ்கோவின் இந்திய குழுத் தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.

ராதாகிருஷ்ணனின் திறன் அவரை மென்மேலும் வளர்த்து, 1952ம் ஆண்டு முதல் 1962ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.

டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தபோது அவரது பிறந்த நாளைக் கொண்டாட, மாணவர்களும், அவரது நண்பர்களும் விரும்புவர். ஆனால் ராதாகிருஷ்ணன் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். அன்றைய தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார். அதன்படியே இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு சிறப்புமிக்க நாள். ஒரு ஆசிரியர்கள் தன்னுடைய மாணவனை எப்படியும் நல்வழிக்கு கொண்டுபோக வேண்டும் என்ற மனநிலையில் தான் கல்வியை புகட்டுவார்கள். ஆசிரியர் பணி என்பது கல்வியை மட்டும் சொல்லி கொடுப்பதில்லை. அதனுடன் ஒழுக்கம், பண்பு, பொது அறிவு போன்ற பல விசயத்தினையும் கற்றுக்கொடுப்பதே ஆசிரியை பணிக்கான அடையாளம். 

இந்த பதிவில் வருகின்ற செப்டம்பர் 05 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு உங்களுடைய ஆசிரியை பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூற இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர் தின வாழ்த்துக்கள் (teachers day quotes in tamil) 

Teachers Day Quotes in Tamil: WhatsApp Status for Teachers Day 

கற்றுத்தந்த வித்தைக்காக என்றென்றும் நன்றி நினைப்பேன்.


ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | teachers day wishes in tamil WhatsApp status 


அறிவென்னும் விளக்கேற்றி அன்பென்னும் வழிகாட்டி எமது வாழ்க்கையில் ஏற்றம் பெற உதவிய ஆசான்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்



ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை:


உலகத்திற்கு நீங்கள் ஆசிரியராக இருக்கலாம், ஆனால் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் ஹீரோ.



ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் | teachers day quotes in tamil:

ஒருவரிடம் நண்பனை, வழிகாட்டியை, பெற்றோரை, இறைவனை ஒன்றாக பார்க்க முடியும் என்றால், அது ஆசிரியர் மட்டுமே!

இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!



ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்: Teachers Day Whatsapp Status


தமிழின் உயிர் எழுத்தில் உள்ள உயிராய் எனக்கு கல்வி புகட்டிய அணைத்து ஆசான்களுக்கும் எனது

ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள்




அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்



வெறும் கல்லாய் இருந்த எம்மை, பட்டைத் தீட்டி ஜொலிக்கும் வைரமாய் மாற்றிய தன்னலமற்ற எமது ஆசான்களுக்கு நிகர் புவியில் யாரும் உண்டோ?

ஆசிரியர் தின வாழ்த்துகள்!