கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014ல் திரைக்கு வந்த படம், 'ஜிகர்தண்டா'. இதில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்தனர். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் திரைக்கு வந்து, கடந்த 1ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, அந்த ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பாபி சிம்ஹா வுக்கு கிடைத்தது. தற்போது இப்படம் 8 வருடங்களை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோவில் புதிய தகவல் சொல்லி இருக்கிறார்.
அதாவது, 'ஜிகர்தண்டா' படத்தின் 2ம் பாகம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதன் 2ம் பாகம் விரைவில் தொடங்கும் என்றும், அதற்கான திரைக்கதை எழுதும் பணி முடிந்து விட்டதாகவும் தெரிவித் துள்ளார். சித்தார்த்துக்கு பதில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாமா என்று படக்குழு ஆலோசித்து வருகிறது.