வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,ராணிப்பேட்டை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
13.87 crores of various projects on behalf of the health department in Ranipet district


ராணிப்பேட்டை மாவட்ட உட்பட 6 புதிய மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக வாலாஜாபேட்டை சுங்கச்சா வடிக்கு நடைபெற்ற தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தபின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.ப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. அதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்த பின் இறுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அனமச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநில கைத்தறி தொழில்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது- தமிழகம் முழுவதும் இன்று(நேற்று) 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 13லட்சத்து 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அதேபோல் இதுவரை தமிழக முழுவதும் 12 கோடியே 15லட்சத்து77ஆயிரத்து 165 தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் பாதிப்புக்கள் குறைந்து வந்தாலும், மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதால் தொற்றின் பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என கூறினார். அதேபோல் தமிழக முழுவதும் முழுதவணை தடுப்பூசி 95.99 சதவீதமாக உள்ளது. மேலும்

ராணிப் பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அடுத்த வாரம் நானும் எனது துறை செயலர் டெல்லிக்கு சென்று புதிய மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைப்பதின் அவசியத்தை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நாளை(இன்று), நாளை தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலை பெற்று வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த 13 கோடியே 87லட்சம்திட்டங்கள் செயல்படுத்த தொடங்கியிருக்கிறோம். இவ்வாறு அவர்கூறினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் வேதநாயகம், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணைத்தலைவர் கமல்ராகவன், மருத்துவம் இணை இயக்குநர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் லட்சுமணன், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர்மணி மாறன்,வட்டாட்சியர் ஆனந்தன், கடப்பேரி ஊராட்சி தலைவர் சண்முகம், வன்னிவேடு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சக்திவேல்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சக்திவேல்குமார், நகர செயலாளர் தில்லை, மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர்கள் செந்தில், தியாகராஜன், இர்ஃபான், மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கே.காந்தி, உட்படபலர்கலந்து கொண்டனர்.