திருவண்ணாமலையில் வரும் 11ம் தேதி ஆடிமாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
11th is the best day to go to Girivalam in Tiruvannamalai on the occasion of the full moon of the month of Adi
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்ட தடை நீங்கியதால், கடந்த 7 மாதங்களாக ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.
மேலும், மாதந்தோறும் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 11ம் தேதி காலை 10.16 மணிக்கு தொடங்கி, 12ம் தேதி காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 11ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் பவுர்ணமி நாளன்று தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.