ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ. இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து 42வது நாளில் கடந்த மாதம் வீட்டில் தாயுடன் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அதி காலையில் கழிவறையில் இருந்த தண்ணீர் பக்கெட்டில் கைக்குழந்தை மூழ்கடித்து கொல்லப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் மனோவின் உறவினரான தேன் மொழி(51) சொத்து பிரச்னையில் குழந்தையை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து தேன்மொழியை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தேன்மொழியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு, எஸ்பி தீபா சத்யன் பரிந்துரை செய்தார். 

இதையடுத்து, தேன்மொழியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவிட்டார்.