ஆற்காடு அடுத்த உப்புபேட்டை, சாத்தூர் கூட்ரோடு, கணபதி நகரை சேர்ந்தவர் வெங்கடாபதி. இவரது மனைவி ஞான சவுந்தரி (58). இவர் நேற்று காலை 9.30 மணியளவில் ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு செல்வதற்காக சாத்தூர் கூட்ரோடு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது பைக்கில் வந்த மர்ம ஆசாமி ஒருஒருவன், ஞானசவுந்தரி அருகில் சென்று அட்ரஸ் கேட்டுள்ளான். அவர் பதில் சொல்வதற்குள், ஞான சவுந்தரி கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு 'எஸ் கேப்' ஆனான்.

இதுகுறித்து ஞான சவுந்தரி ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.