அரக்கோணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார்(35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செந்தமிழ்(32). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி வீட்டில் வெந்நீர் வைப்பதற்காக அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செந்தமிழின் புடவையில் தீப்பிடித்தது. 

அலறித்துடித்தவரை கணவரும், அக்கம்பக்கத்தினரும் மீட்டு அரக்கோணம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செந்தமிழ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.