Stock Market Status Don't spend unnecessarily it's time to save

இந்திய பங்குச் சந்தைகள், கடந்த வாரத்தில் நாம் ஏற்கனவே கணித்தபடி, ஏற்றம் இறக்கமாகத்தான் இருக்கின்றன. கரோனா காலத்துக்கு பின்னர், சந்தைகள் மறுபடியும் ஒரு பெரிய இறக்கத்தை இப்போது சந்திப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மார்ச் 2020 க்கு பின்னர், ஒருகால் ஆண்டில் ஏற்பட்ட சந்தை நஷ்டங்கள், இந்தக் காலாண்டில்தான் அதிகமாக இருக்கிறது.

இதற்கு காரணங்கள் என்னவென்று பார்த்தால் கூடிவரும் வட்டி விகிதங்கள், பணவீக்கம், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்துச் செல்வது, இந்தியாவில் கார்ப்பரேட் கம்பெனிகளின் காலாண்டு லாபங்கள் குறையும் என்ற எதிர் பார்ப்பு, நாட்டில் பொருளாதார மந்த நிலை வரலாம் என்ற யூகங்கள் ஆகியவைதான் பிரதானமாக இருக்கின்றன.

குறிப்பாக அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் கூடி வருவதால், இந்தியாவிலிருந்து அதிகளவு முதலீட்டு தொகையை, போர்ட்போலியோ மேனேஜர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த வகையில், கடந்த 6 மாதத்தில் மட்டும் வெளிநாட்டு போர்ட் போலியோ முதலீட்டாளர்கள் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை திரும்ப எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் இந்திய சந்தைகள் வலுவிழந்து வருகின்றன. டாலருக்கு எதிராக ரூபாயும் வலுவிழந்து வருகிறது. அதே நேரத்தில் கிரிப்டோ கரன்சி சந்தையில் பிட்காயின் தன் அதிகபட்ச விலையில் இருந்து சுமார் 60 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தை வர்த்தக முடிவு நாளில்


பங்கு சந்தைகளின் வாராந்திர வர்த்தக முடிவு நாளான வெள்ளிக்கிழமையில், மும்பை பங்குச் சந்தை 111 புள்ளிகள் சரிந்து, 52,907 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 28 புள்ளிகள் சரிந்து 15,752 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதுபோன்ற சந்தை நிலையிலும் வெள்ளிக்கிழமையில் ரெஸ்பான்சிவ் இண்டஸ்டிரீஸ் பங்குகள் 19.22 சதவீதமும், முத்தூட் பைனான்ஸ் பங்குகள் 6.42 சதவீதமும், எப்.டி.சி.பங்குகள் 6.07 சதவீதமும், ஜூபிலியண்ட் புட் வொர்க்ஸ் பங்குகள் 5.86 சதவீதமும்,  ஆனந்த்ராஜ் லிமிடெட் பங்குகள் 5.78 சதவீதமும் உயர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வெளியீடுகள்


புதிய வெளியீடுகள் சமீப காலத்தில் ஏதும் வருவதாக தெரியவில்லை. எல்ஐசி, பங்குகள் சந்தையில் கடந்த வாரத்தை விட சிறிது உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமையில் இறுதியாக 676 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

டாலருக்கு எதிரான ரூபாய்


அமெரிக்காவின் டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண் டிருக்கிறது. வெள்ளிக் கிழமையில் டாலருக்கு எதிரான மதிப்பு 78.95 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. 79 ரூபாயையும் இது தாண்டிச் சென்று பின்னர் சிறிது கீழே வந்திருக்கிறது. பொருட்களின் விலை கூடும், தங்கம், பெட்ரோல் விலை கூடும். பணவீக்கம் கூடும் அபாயமும் உள்ளது. நம் அறிவுரை என்னவென்றால் இது போன்ற காலங்களில் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சேமிப்பை கூட்டுங்கள் என்பதுதான்

என்ன பங்குகள் வாங்கலாம்? 


வினாதி ஆர்கானிக்ஸ், எஸ்பிஐ, மகேந்திரா மகேந்திரா, மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் ஆகிய கம்பெனிகள் உங்கள் போர்ட்போலியோவில் இருக்கலாம்.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்? 


அடுத்த வாரமும் சந்தைகள் கீழே இருப்ப தற்கான வாய்ப்புகள் அதிகம். காலாண்டு முடி வுகள் என்ன என்பது, அடுத்த 10 நாட்களில் வரத் தொடங்கும். அவைகளும் சந்தைக்கு சாதகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை