Special train from Arakonam to Tiruthani for Audi Krittikai Festival

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகை திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருத்தணிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்வர்.

இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக ஆடி கிருத்திகை உற்சவம் பக்தர்களின்றி நடந்தது.

இந்த ஆண்டு வரும் 23ம் தேதி சனிக்கிழமை ஆடி கிருத்திகை விழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 21 முதல் 25ம் தேதி வரை 5 நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

காலை 10.20, மதியம் 1 மணி, பிற்பகல் 2.50 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணி செல்லும்.

மறுமார்கத்தில் திருத்தணியில் இருந்து 10.50, 1.30, 3.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் வந்து சேரும்.