இந்த வாரத்தில், வாரச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால் சந்தைகளில் நிலைமை அதற்கு மாறாக இருந்தது.

இதற்கு காரணம் என்ன? ரிசர்வ் வங்கியின் சில அறிவிப்புகளும், கச்சா எண்ணை விலை குறைந்ததும் பிரதான காரணமாக இருந்தன. வெளிநாட்டிலிருந்து அன்னியச் செலாவணி வரத்துக்காக ரிசர்வ் வங்கி பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது வெளிநாடு களிலிருந்து அன்னிய செலாவணி வரத்தை அதிகரிக்கும். இதனால், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வலுபெறும்.

சந்தை வர்த்தக முடிவு நாளில் பங்கு சந்தைகளின் வாராந்திர வர்த்தக முடிவு நாளான வெள்ளிக்கிழமையில், மும்பை சந்தை 303 புள்ளிகள் உயர்ந்து 54,481 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 87 புள்ளிகள் உயர்ந்து 16,220 புள்ளி களுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இந்த வகையில், கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம், 1,574 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது, முதலீட்டாளர்களுக்கு ஆறுதலான விஷயமாகும்.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஹிமாதிரி ஸ்பெஷாலிட்டி பங்குகள் 9.27 சதவீதமும், யூபிளக்ஸ் பங்குகள் 7.10 சதவீதமும், அஸ் டெக் லைப்சயின்ஸ் பங்குகள் 6.86 சதவீத மும், ஷாப்பர்ஸ் ஸ்டாப் 'பங்குகள் 6.84 சதவீதமும், ஷோபா டெவலப்பர்ஸ் பங்குகள் 5.40 சதவீதமும் உயர்ந்தன.

புதிய வெளியீடுகள் | New IPO


புதிய வெளியீடுகள் சமீப காலத்தில் ஏதும் வருவதாக தெரியவில்லை. எல்ஐசி பங்குகள், சந்தையில் சென்ற வாரத்தை விட சிறிது உயர்ந்து, 708 ரூபாய்க்கு வர்த் தகமானது.

காலாண்டு முடிவுகள் | Quarterly Results 


அவன்யூ சூப்பர் மார்க்கெட் மிக சிறப் பான காலாண்டு முடிவைக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 680 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் லாபம் 115 கோடி ரூபாயாக இருந்தது.டிசிஎஸ் எதிர்பார்த்த அளவு காலாண்டு முடிவுகளை கொடுக்கவில்லை. சிறிது பின்தங்கியே இருக்கிறது.

என்ன பங்குகள் வாங்கலாம்? | Shares to Buy 


மாருதி சுசூகி, சீமென்ஸ், ப்ளூ டார்ட், கேஈஐ. இண்டஸ்டீரீஸ், ராஜ்ரதன ஆகிய கம்பெனிகள் உங்கள் போர்ட்போலியோவில் இருக்கலாம்.

மியூச்சுவல் பண்ட் | Mutual Fund 


இதுபோன்ற சரிவான சந்தைகளிலும் மக்கள் மியூச்சுவல் பண்டின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள். மாதம் 2,500 புள்ளிகள் சந்தையில் குறைந்தபோதும், மியூச்சுவல் பண்டில் முதலீட் டாளர்கள் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்கள்.

இதை வைத்து பார்க்கும்போது சந்தையில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. சந்தையின் ஒவ்வொரு சரிவின் போதும் முதலீடு செய்வது என்பது முக்கியமான ஒன்றாகும். அதைத்தான் முதலீட்டாளர்கள் செய்திருக்கிறார்கள்.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்? Next week Market Prediction 


ரிசர்வ் வங்கி அறிவிப்புகள், கச்சா எண்ணை விலை குறைப்பு ஆகியவைகளை அடுத்து சந்தைகள் சிறிது பாசிட்டிவாக இருக்கிறது. இது தொடரும் வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும், வரப்போகும் காலாண்டு முடிவுகளும் சந்தையின் போக்கை தீர்மானிக்கும்.