OPS admitted in hospital for corona treatment at chennai
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ் ஆகியோரும் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பன்னீர்செல்வமும் கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.