பாணாவரம் அடுத்த மேல் வீராணம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (60). விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மேல்வீராணம் கிராமத்தில் உள்ள ஆர்ச் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் அதி வேகமாக பைக்கில் வந்துவந்து முனிரத்தினத்தின் மீது மோதினர்.
படுகாயமடைந்த அவர் வாலாஜா அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் விஜயகாந்த் பாணாவரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். எஸ்ஐ பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.