பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்சார் N160 என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 
பல்சார் வரிசையில் சமீபத்திய வரவாக அறிமுகம் ஆகியுள்ள இதில், 164.82 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 16 பிஎஸ் பவரையும், 6,750 ஆர்பிஎம்-ல் 14.65 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முன்புறம் 300 எம்எம், பின்புறம் 230 எம்எம் டிஸ்க் பிரேக்குகள், எல்இடி புரொஜக்டர் ஹெட்லாம்ப் உள்ளன. 

பல்சார் வரிசையில் இந்த பைக்கில்தான் முதன் முதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் இடம் பெற்றுள்ளது.முன்புறம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்புறம் நிட்ரோக்ஸ் மோனா ஷாக் அப்சர்பரும் இடம் பெற்றுள்ளது. 

இதில் உள்ள இன்பினிடி டிஸ்பிளே கன்சோலில் கியர் இன்டிகேட்டர், கடிகாரம், எரிபொருள் சிக்கனம் மற்றும் தற்போதுள்ள எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லும் என்ற ரேஞ்ச் விவரங்களும் இடம் பெற்றிருக்கும். 

மொபைல் சார்ஜிங் செய்ய யுஎஸ்பி வசதியும் உள்ளது. 

தமிழகத்தில் ஷோரூம் விலையாக 1,27,981 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.