திமிரி அடுத்த கனியனூர் கம்மாளர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (50). இவரது மனைவி பச்சை யம்மாள் (47). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.  கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். கடந்த 17ம் தேதி மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பச்சையம்மாள் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. நேற்று (19ம் தேதி) அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல்றிந்த திமிரி இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.