இந்தியாவில் தொழில் பண்றதா இருந்தாலும்.... திருமணம் பண்றதா இருந்தாலும், எது பண்றதா இருந்தாலும்...

நேரம்னு ஒன்னு பார்க்காமல்
பண்ண மாட்டோம்‌.....!

இந்த மணி பாக்குறோமே
இந்த மணி சரியான மணியா இல்ல நாம குத்துமதிப்பான மணியதான் பாக்குறோமா'னு அறிவியல் படி சான்றுகளுடன் தெரிந்து கொள்ளத்தான் இந்தப்பதிவு...

ஒரு ஆண்டுக்கு 365 நாள்னு எல்லாரும் சொல்லுவோம்.. ஆனா அது சரியான கணக்கு இல்ல...


365 நாள் + கால் நாள் ஓர் ஆண்டுக்கு....
இந்தக் கால் நாள் இருக்கில்ல...
இதை தான் நாம 4 ஆண்டுக்கு ஒருமுறை இதுல சேர்த்துட்டு ஒரு நாளா கணக்கு வச்சுட்டு... லீப் ஆண்டாக 366 நாள்னு கணக்கீட்டுக்காக வைக்குறோம்..
 
அதனால இதிலேயே ஆண்டுக்கு 6 மணி நேரம் தவறுதல் ஆகுது...

இதுவும் உண்மையான நேரம் இல்ல..!

ஒரு நாளைக்கு 24 மணி நேரம்னு நாம ஒரு வட்டமா வேணும்றதுக்காக வைத்து இருக்கோம்.. ஆனா ஒரு நாளைக்கு 23 மணி நேரம் 56 நிமிடம் 4 வினாடி தான்..!

ஆக.. இதிலேயும் ஒரு 4 நிமிடம் அன்றாடம் குறையுது...!

இதுவும் உண்மை இல்ல..!

உலகம் முழுவதும் ஒரே மாதிரி நேரம் வேணும்னு 'தாலமி' அப்படீங்கிறவரு பூமியைச் சுற்றி, அட்சக்கோடு தீர்க்கக்கோடுனு கற்பனையா வரைஞ்சாரு...
 
அந்தக் கோடுகளை வரைஞ்ச பிறகு உலகத்துல எந்தப் பகுதியில இருந்து நேரத்தைக் கணக்கிடுறதுனு விஞ்ஞானிகளிடம் சண்டை வர...

இறுதியா...பழமையான ஆராய்ச்சி மையம் பூமிக்கு நடு மையத்துலையும் இருக்கிற இங்கிலாந்துல இருக்கும் கிரீன்விச்ல இருந்து தொடங்கலாம்னு அந்த இடத்துல என்ன மணி இருக்கோ அதை வச்சு... உலகம் முழுக்கக் கணக்குப் பண்ணிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாங்க..

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நேர வேறுபாடே 5 1/2 மணிநேரம்..

அப்போ..இதிலேயும் சரியான நேரம் இல்ல...

சரி அதுவும் வேணாம் விடுங்க....

இந்தியாவுல நாம பார்க்கிற நேரம் தான் சரியான நேரமானு பாத்தா அதுவும் இல்ல....ஏன் அப்படீனா...

இந்தியால மேற்கில் மும்பையில இருந்து கிழக்கில் அருணாசல பிரதேசம் வரை உள்ள தூரம் 2933கிமீ.... அதனால அன்றாடம் 2 1/2 மணிநேரத்துக்கு முன்னாடியே‌.... அருணாசல பிரதேசத்துல சூரியன் உதிச்சுடும்...

நமக்கு அப்பதான் 5மணி ஆகிட்டு இருக்கும்... விடிஞ்சுருக்காது நமக்கு... ஆனா அங்க 7.30 மணி ஆகிருக்கும்..!

ஒரு நாட்டுக்குள்ளையே.... ஒவ்வொரு மாதிரி நேரம் இருந்தா... நாட்டை எப்படி‌.. முறைப்படுத்த முடியும்..?

அரசுப் பணியாளர்களை வேலைக்கு எந்த நேரத்துல அணுப்புறதுன்னும் இந்திய அரசுக்குக் குழப்பம் வந்துடுச்சு...! அப்போ தான் தாலமி வரைஞ்ச கோட்டை வச்சு‌... இந்தியாவுல நடு இடத்துல இருக்கிற.. அதாவது 2933 கி.மீட்டரைப் பாதியாகப் பிரிச்சு, அது எந்த இடத்துல இருக்குனு பார்த்தாங்க..

அதுதான்... உத்திரபிரதேச மாநிலம், அலகாபாத் ஊர்...

அதனால அந்த இடத்துல என்ன நேரம் இருக்கோ அதே நேரத்தை இந்தியா முழுக்கப் பயன்படுத்திக்கலாம்...... அதுதான் சரியான தீர்வா இருக்கும்னு அரசு முடிவுக்கு வந்தாங்க.....!

அன்றில் இருந்து அலகாபாத்ல இருக்கிற நேரம்தான் இந்தியாவோட பொதுவான நேரமா மாறிருச்சு...!

சொல்லப்போனா நாம இப்ப பாக்குற நேரம் நம்ம தமிழ்நாட்டுல நம்ம ஊர்ல உள்ள நேரம் இல்ல.... உத்திர பிரதேசத்துல அலகாபாத்ல இருக்கிற நேரம்.....

இதே தான் எல்லா மாநிலத்துக்கும் இப்ப இருக்கு...! 

இதே நிலைமைதான் நம்மை மாதிரி பெரிய நாடு ரசியாவுக்கும்....! அவன் என்ன பண்ணிட்டான்.. சொந்த நாட்டுக்குள்ளேயே‌.... மணியை ஏழு வகையாப் பிரிச்சுப் பயன்படுத்திட்டு இருக்கான்‌... ஒவ்வொரு மாநிலத்துக்குப் போனாலும் ரசியாவுல வேற வேற நேரம்தான் இருக்கும்.... இப்படித்தான் நாம பார்க்கிற நேரம்‌.....!

அதாவது மிகத் துல்லியமான நேரம்னு இந்தியாவிலேயோ உலகத்திலேயோ....எங்கேயும் இல்ல....!


இதில் குழந்தை பிறந்த நேரத்தை வெச்சு ஜாதகம் எழுதறீங்க.. எதிர்காலத்தைக் கணிக்கறீங்களே.... இது நம்மை நாமே முட்டாளா ஆக்கிக்குற விசயம் இல்லையா‌...? அப்படி இருக்கிறப்போ.... நல்ல நேரம் 10நிமிடத்துல முடிஞ்சுருச்சுன்னு, பொண்ணு வீடு மாப்பிள்ள வீடு சண்டை போட்டுத் திருமணத்தை நிறுத்தறது...!

நல்ல நேரம் முடிஞ்சுருச்சுன்னு இன்னைக்குத் தொடங்க இருந்த தொழிலை, 2மாதம் தள்ளிப்போட்டு, தொழிலுக்கு வாங்குன கடனுக்கு சும்மாவே வட்டி கட்டுறது.... அடுத்த வருடம் தான் எனக்கு நாள் நல்லா இருக்கும்னு....1 வருடம் வேலைக்குப் போகாம இருக்கிறது...

40 அகவையில் தான் கலியாணக் களை இருக்குன்னு, நாமே நம்மோட இளமையத் தொலைச்சுட்டு.. வாழ்க்கைய இழக்குறதுன்னு‌... நம்மோட வாழ்க்கையோட முன்னேற்றத்துக்கு.. நாமே முட்டுக்கட்டை போட்டுட்டு இருக்கோம்...

இது எல்லாருக்குமான பதிவுதான்....!

இறை நம்பிக்கை வேற 
மூடநம்பிக்கை வேற..... எப்படி உடன்கட்டை ஏறுதல்....பெண் குழந்தைக்குக் கள்ளிப்பால் ஊத்திக்கொல்லுறது, எல்லாம் மூட
நம்பிக்கைனு நாம தெரிஞ்சுட்டு அதை ஒதுக்கி வச்சமோ‌‌..அதே மூட நம்பிக்கைகள் தான் இந்த நல்ல நேரம், ராகுகாலம், ஜாதகம் எல்லாம்....!

அருள்கூர்ந்து மீண்டு வாங்க ... மூட நம்பிக்கைகளில் இருந்தாவது...!வாழ்க்கையில் நீங்க நினைக்கிற எந்தச் செயலுக்கும் நேரத்தைக் காரணமா வச்சு....தள்ளிப் போட்டுடாதீங்க....அந்த நேரத் தள்ளலே....நீங்க போக வேண்டிய 
உயர்ந்த இடத்துல இன்னொருவரை அமர வைத்து விடும்.....!

தொழிலாக இருந்தாலும் அதே தான்...!மணி என்பது நாம் நேரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த நம்முடைய பணிகளைச் சரியாகத் திட்டமிட்டு...
செயல்படுத்த மட்டுமே தவிர மற்றபடி....

நல்லநேரம் கெட்ட நேரம் எல்லாம் இல்ல..!