வேலூர் மாவட்டம் ரங்காபுரம் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு பெண்கள் சென்று கொண்டிருந்த டூவீலர் மீது சொகுசு பேருந்து மோதி இன்று விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில், டூவீலரில் சென்ற 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் இருந்த மற்றொரு பெண் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது லைனில் சென்று கொண்டிருந்த டூவிலர், திடீரென மூன்றாவது லைனுக்கு சென்றபோது, மூன்றாவது லைனில் வந்த சொகுசு பேருந்து டூ வீலர் மீது மோதியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த பெண் மற்றும் சிகிச்சையில் உள்ள பெண் இருவரும் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வருவதாகவும் , அவர்கள் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.