காமெடி நடிகர் யோகி பாபு நேற்று அணைக்கட்டு அடுத்த மூலை கேட் பகுதியில் உள்ள வேலாயுதம் தணிகை மலைக்குச் சென்று அங்குள்ள முருகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தனையடுத்து நேற்று இரவு 8. 30 மணிக்கு வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலுக்கு நடிகர் யோகி பாபு மற்றும் அவரது குழுவினர் சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடிகர் யோகி பாபுவுக்கு எல்லையம்மன் கோவில் நிர்வாகத்தின் சார்பாக மரியாதை செய்தனர். 
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த எல்லையம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கோமாதாவுக்கு கரும்பு சோகையை வழங்கினார். நடிகர் யோகி பாபு எல்லையம்மன் கோவிலுக்கு வந்துள்ளதை அறிந்த பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர். யோகி பாபு பொதுமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.