காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். 107வது திவ்யதேச மாகவும், பூலோக வைகுண்டமாகவும் கருதப்படுகின்ற இந்த கோயிலில் ஆதிசேஷன் மீது ரங்கநாமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்தப் பெருமாளை வணங்குபவர்களுக்கு சித்திர குப்தர் எழுதி வைத்த அனைத்து பாவங்களும் நீங்குவதாக மெய்விரத மான்மியம் என்னும் மங்கள சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. கடந்த 4ம் தேதி திங்கட்கிழமை காலை அக்னி பிரதிஷ்டை, அங் குரார்ப்பணம், வேத பிரபந்தம் துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 5ம் தேதி செவ்வாய்க்கிழமை மகா சாந்தி ஹோமம், கரிகோலம் உள்ளிட்ட நிகழ்வுகள் வேதபாராயணம் ஒத நடந்தது.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு பூலோக வைகுண்டமாக திகழும் ஸ்ரீரங்கநாத பெருமானுக் கும், பரிவார மூர்த்திகள் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமான் அருளை பெற்றனர். மாலை 6 மணிக்கு உபய நாச்சியார்களுடன் ரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி கவுதம் பட்டாச்சார்யா மற்றும் பரம்பரை தர்மகர்த்தா வசுமதி உள்ளிட்டோர் ஏற்பாடுகள் செய்தனர்.